• Jan 18 2025

உலக அழகியை விவாகரத்து செய்கிறாரா அபிஷேக் பச்சன்? சந்தேகத்தை கிளப்பிய போட்டோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'இருவர்' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இந்தியளவில் பல இளைஞர்களின் மனதில் கனவுக் கன்னியாக இருந்து வந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இத்தம்பதியினருக்கு 2011 ஆம் ஆண்டு ஆராதரனா பச்சன் என்ற மகளொருவர் பிறந்தார். இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாக ஒரு மகளும் உள்ளார்.


திருமணத்திற்குப் பின்னர் ஐஸ்வர்யா ராய், தனது மனதுக்கு நெருக்கமான கதைகளை அதிகம் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்-2' வெளியானது. 

இந்த நிலையில், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் விவாகரத்து செய்யும் முடிவில் உள்ளதாக மீண்டும் ஒரு தகவல் பாலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. 

அதனை நிரூபிக்கும் வகையில், அபிஷேக் பச்சனின் புகைப்படம் ஒன்று வெளியாகி சந்தேகத்தை தூண்டி விட்டுள்ளது.


அதுமட்டுமின்றி, ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் மகிழ்ச்சியாக இல்லை என உமர் சந்து  ட்வீட் செய்துள்ளார். 

இது தவிர, அபிஷேக் பச்சனின் கையில் அவரது திருமண மோதிரம் இல்லை என்பதும் அண்மையில் அவதானிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், அபிஷேக் ஐஸ்வர்யாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடரவில்லை என்றும் வதந்திகளும் உள்ளன. 

இதுகுறித்து உமர் சந்து கூறுகையில், இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக பரஸ்பர புரிந்துணர்வு இருப்பதாகவும், அவர்கள் பிரிந்து செல்ல தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார்.


எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. தற்போது அபிஷேக் பச்சனின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

இதேவேளை, குறித்த தகவல் பொய்யாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement