• Jan 18 2025

மாமியாருக்கு லிப்கிஸ் கொடுத்தது தப்பா? உங்க பார்வை தான் தப்பு: இந்திரஜா ரோபோசங்கர்

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

எனது கணவர் தனது மாமியாருக்கு லிப்கிஸ் கொடுத்தது தப்பு இல்லை என்றும் அதை பார்ப்பவர்கள் மனதில் தான் தப்பு இருக்கிறது என்றும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்திரஜா ரோபோ சங்கர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகை இந்திராஜா திருமணம் நடந்தது என்பதும், பெரிய பெரிய நட்சத்திரங்கள் கூட ஆடம்பரம் இன்றி அமைதியாக திருமணம் செய்த நிலையில் ஒரு காமெடி நடிகரின் மகள் திருமணம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்துடன் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தனது திருமணத்தில் முதலிரவை தவிர மற்ற அனைத்தையும் படமாக்க ஒரு முன்னணி யூடியூப் சேனலுக்கு அனுமதி அளித்த வகையில் அதில் சில லட்சங்களை கிடைத்தது என்றும் கூறப்பட்டது. இந்திரஜா திருமணத்திற்கு பல பிரமுகர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள் என்பதும் திருமணம் குறித்த வீடியோக்கள் அதன் உரிமையை பெற்ற ஒரே ஒரு சேனலில் மட்டும் வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் திருமண நிகழ்ச்சியின் போது இந்திராஜா  கணவர் திடீரென தனது மாமியாருக்கு லிப்கிஸ் கொடுத்தது தான் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த இந்திரஜா, தனது கணவர் அவர் மாமியாருக்கும் லிப்கிஸ் கொடுத்தது ஒன்றும் தப்பில்லை, உங்கள் பார்வையில் தான் தப்பு இருக்கிறது என்று கூறினார்.

அதேபோல் தனது அப்பாவுக்கும் இந்திரஜா லிப்கிஸ் கொடுத்தது குறித்து கூறிய போது என் அப்பாவிற்கு நான் சின்ன வயதில் இருந்தே இப்படித்தான் முத்தம் கொடுத்து விளையாடுகிறேன், நான் வளர்ந்து பெரியவளாகி திருமணம் ஆகிவிட்டால் மட்டும் நான் அவருக்கு மகள் இல்லை என்று ஆகிவிடாது. நான் முத்தம் கொடுத்தது எந்த தவறும் இல்லை, அதை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களின் கண்ணில் தான் தப்பு இருக்கிறது,  என்று தெரிவித்தார். மேலும் அதை தப்பு என்று சொன்னால் உங்கள் அம்மா அப்பா உங்களை தப்பாக வளர்த்திருக்கிறார்கள் என்று தான் அர்த்தம் என்றும் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement