• Oct 05 2024

இந்தியன் , சிவாஜி , முதல்வன் மூவரும் ஒரே படத்தில் ! இயக்குனர் சங்கர் கொடுத்த மரண அப்டேட்!

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

வெவ்வேறு படங்களில் இருக்கும் பிரபலமான பிரபலமான கதாபாத்திரங்களை அதே கதாபாத்திரமாக இன்னொரு திரைப்படத்தில் கொண்டுவருவதென்பது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலம் தமிழ் சினிமாவிலும் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இதை பற்றி இயக்குனர் சங்கர் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.


ஷங்கர் ஒரு முன்னணி இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. இவ்வாறான இவர் சமீபத்தில் கொடுத்த தகவல் பல சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.


அவர் கூறுகையில் "இந்தியன், முதல்வன், சிவாஜி மூவரையும் ஒரே படத்தில் கொண்டுவரலாம் என 2008ல் எனக்கு யோசனை வந்தது. என்னுடைய இணை இயக்குநர்களிடம் இதனை கூறியபோது அவர்கள் பெரிதாக இதை ஊக்குவிக்கவில்லை. அதனால், அப்படியே அதை கைவிட்டுவிட்டேன்." என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement