• Oct 08 2024

சுக்குநூறாக உடைந்த ரோகிணியின் மாஸ்டர் பிளான்.. முத்துவுக்கு தெரியவந்த உண்மை

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகினி வித்யாவிடம் பிஏ வை பற்றி பேசிக் கொண்டிருந்ததோடு, முத்துவும் எப்படியாவது அவனை  கண்டுபிடிப்பதாக சொல்லி இருக்கின்றார். இதனால் அவன் சும்மா இருக்க மாட்டான். எனவே சத்யாவின் வீடியோவை எடுப்பதற்கு பார்க்க வேண்டும். அப்படி என்றால் தான் முத்துவுக்கும் மீனாவிற்கும் இடையில் பிரச்சனை வந்து விஜயா அவர்களை வீட்டை விட்டு வெளியே துரத்துவார் என்று பிளான் போடுகின்றார் ரோகினி.

அதன்படி முத்துவின் காரை புக் பண்ணி காரில் போகும்போது நைசாக போனை எடுக்குமாறு வித்யாவுக்கு பிளான் போட்டு கொடுக்கின்றார். அதேபோல வித்யாவும்  காரை புக் பண்ணி முத்துவுடன் போகும் போது தனது போனில் சார்ஜ் இல்லை என்று முத்துவின் போனை வாங்கி வீடியோவை பார்க்கின்றார். ஆனால் அவர் அனுப்புவதற்கு முதல் மீனா கால் பண்ணி விடுகின்றார்.


இதனால் முத்து கதைத்துக் கொண்டேன் வித்யா சொன்ன இடத்தில் கொண்டு போய் இறக்கி விடுகின்றார். இதனால் அவரால் வீடியோவை எடுக்க முடியவில்லை. அதன் பிறகு நடந்தவற்றை வித்யா ரோகிணியிடம்  சொன்னதோடு முத்து கோயிலுக்கு போய் பிஏ பற்றி விசாரித்ததை மீனாவுடன் போனில் கதைத்தாகவும் சொல்கிறார். எனவே கவனமாக இருக்குமாறு வித்யா சொல்லி ஃபோனை வைக்கின்றார்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து தான் லெட்டர் போட்டது யார் என்று கண்டுபிடித்து விட்டதாக சொல்கின்றார். அண்ணாமலை அது யார் என்று கேட்க, ஆரம்பத்தில் அவனை மனோஜின் கல்யாணத்தில் பார்த்ததாகவும் அதற்கு பிறகு போலீஸில் பிடித்துக் கொடுத்ததாகவும் சொல்லுகின்றார். இதை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய எபிசோட்.


Advertisement