• Jan 19 2025

குடித்துவிட்டு டர்ச்சர் செய்தார்! அம்மாவை அடிப்பார்! மகளின் குற்றச்சாட்டு குறித்து வீரம் பட நடிகர் உருக்கம்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

'அன்பு,காதல் கிசு கிசு,கலிங்கா,வீரம்,அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. இவர் மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். 2019-ம் ஆண்டு அம்ருதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலா. கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டார். 


இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார். இதனிடையே பாலா 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பாலாவின் மகளான அவந்திகா, வீடியோ ஒன்றை வெளியிட்டியிருந்தார். அதில், "என்னுடைய தந்தை என்னை மிகவும் நேசிப்பதாகவும், என்னை மிஸ் செய்வதாகவும் எனக்கு நிறைய பரிசு பொருள்களை வாங்கி கொடுத்ததாகவும் பல பேட்டிகளில் கூறி வருகிறார். 


ஆனால், இது எதுவும் உண்மை இல்லை, என் தந்தையை நேசிக்க எனக்கு ஒரு சின்ன காரணம்கூட இல்லை, அவரை நினைக்கும் போது, என்னையும் என்னுடைய குடும்பத்தையும் செய்த டார்ச்சர், குடித்துவிட்டு என் அம்மாவை அடித்ததுதான் எனக்கு கண் முன் வருகிறது. அந்த நேரத்தில் என்னால், என் அம்மாவிற்கு உதவ முடியவில்லை, ஆனால், அந்த வலியை நான் இப்போது உணர்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். இதனால், தயவு செய்து என் வாழ்க்கையில் குறுக்கீடாதீர்கள்" என்று பேசியிருந்தார். 


தற்போது இதற்கு பதிலளிக்கும் வகையில் பாலா வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். “ மகளே, முதலில் என்னை அப்பா என்று அழைத்ததற்கு நன்றி. நான் உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. ஒருவன் மகளுடன் வாக்குவாதம் செய்தால் அவன் மனிதனே கிடையாது. இனி நான் உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன். நீ, ஐந்து மாத கருவாக வயிற்றில் இருக்கும் போதே உனக்கு அவந்திகா என பெயர் வைத்து அழகுப்பார்த்தவன் நான். உன் சின்ன சின்ன அசைவுகளை நான் ரசித்து மகிழ்ந்தேன். நீ எப்போதுமே எனக்கு குழந்தைதான்" என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். 

Advertisement

Advertisement