• Jan 18 2025

’இந்தியன் 2’ படத்திற்கு தொடங்கியது முன்பதிவு.. பல இடங்களில் பச்சை.. கமல் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2’ திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் தற்போது சென்னை உள்பட பெருநகரங்களில் முன்பதிவு தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

’இந்தியன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த படத்தின் முன்பதிவு ஒரு சில நிமிடங்களில் அனைத்து தியேட்டர்களிலும் விற்று தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முன்பதிவு தொடங்கி பல மணி நேரம் ஆகியும் இன்னும் சில தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆகவில்லை என்றும் முதல் காட்சிக்கு ஹவுஸ் ஆவதில் இன்னும் திணறிக்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.



குறிப்பாக சென்னையின் முக்கிய இடத்தில் உள்ளது தேவி திரையரங்கில் இன்னும் பல சீட்டுகள் காலியாக இருக்கிறது என்பதும் எங்கு பார்த்தாலும் பச்சை நிறமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இதனால் கமல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'விக்ரம்’ திரைப்படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து கமல் படம் வெளியாகும் நிலையில் அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது முன்பதிவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படம் முதல் நாளில் வசூல் சாதனை செய்யும் என்று நம்பிக்கையுடன் படக்குழுவினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement