தமிழ்நாடு அரசு சமீபத்தில் 2014 முதல் 2022 வரை வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னதிரை நிகழ்ச்சிகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.
இதில் முக்கியமாக, 2016–2022 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள், 2014–2022 ஆண்டுகளுக்கான சின்னதிரை விருதுகள், 2015–2016 கல்வியாண்டுகளுக்கான MGR திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவை அடங்குகின்றன.
இந்த விருதுகள் பிப்ரவரி 13 அன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் சிறப்பாக வழங்கப்படவுள்ளன. விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டு விழாவை அலங்கரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் இந்த விருதுகள், திரையுலகில் தரமான படைப்புகளை ஊக்குவித்து, கலைஞர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஒரு முக்கிய முயற்சியாகும். ரசிகர்கள் மற்றும் திரையுலகப் வட்டாரங்கள் இந்த விழாவை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில், சிறந்த நடிகர் விருதுக்காக தனுஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அவருடைய நன்றி வாழ்த்து பலரது கவனம் ஈர்த்துள்ளது.
Listen News!