• Jul 22 2026

மகேஷ் பாபுவுக்கு நடிப்பு பயிற்சியா? அப்படியே தமிழ் சினிமாவையும் காப்பாத்துங்க..! மீண்டும் வம்பிழுத்த ப்ளூ சட்டை

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரான மகேஷ் பாபு நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட படம் ஒன்று விரைவில் ஆரம்பமாக உள்ளது. தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களை ராஜமௌலி பான் இந்திய ஹீரோக்களாக மாற்றி வருகின்றார்.

தமிழ் சினிமாவில் ஷங்கர் தவறவிட்ட பல்வேறு விஷயங்களை தற்போது ராஜமௌலி டோலிவுட் சினிமாவில் துணிச்சலுடன் செய்து காட்டி சாதனை படைத்து வருகின்றார்.

அந்த வகையில் ராம்சரண், சீனியர் என்டிஆர், பிரபாஸ் என முன்னணி நடிகர்களை வைத்து உருவாக்கிய ராஜமௌலி, அடுத்ததாக மகேஷ் பாபுவை  நடிகராக மாற்ற முயற்சித்துள்ளார்.

அதன்படி சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள மகேஷ் பாபுவின் படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக மகேஷ் பாபுவை, நடிகர் நாசரை வைத்து நடிப்பு பயிற்சியையும் வசன உச்சரிப்பு பயிற்சியையும் ராஜமௌலி  கொடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்த நிலையில், இந்த தகவலை அறிந்த ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள  பதிவில் ஒரு வழியாக மகேஷ் பாபுவை நடிக்க வைக்கும் இமாலய முயற்சி ஆரம்பம். விஜய் ஆண்டனிக்கும் நடிப்பு பயிற்சி  கொடுத்து தமிழ் ரசிகர்களை காப்பாற்றுவாரா நாசர் என நக்கலாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ படத்தை தாறுமாறாக விமர்சித்தார் ப்ளூ சட்டை மாறன். அதற்குப் பிறகு ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் சர்ச்சைகள் கிளம்பின.

இதைத்தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து விஜய் ஆண்டனியை வம்பு இழுத்து வருகின்றார். அதன்படியே தற்போது மகேஷ் பாபுவுக்கும் நடிக்க தெரியவில்லை. விஜய் ஆண்டனிக்கும் நடிக்க தெரியவில்லை என தனது வன்மத்தை கக்கி உள்ளார் ப்ளூ சட்டை மாறன். இது தெலுங்கு ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement