• Jan 18 2025

"எதுவும் என் கையில் இல்லை" -ரசிகரின் கேள்விக்கு ஹிப் ஹாப் தமிழாவின் பதில்.

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

சுயாதீன இசை கலைஞர்களாக தமிழில் அறிமுகமாகி யாரும் எதிர்பார்க்க முடியாத ஓர் வளர்ச்சியை பெற்ற ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த கட்ட இசையமைப்பாளர் பரிணாமத்திற்கு வாய்ப்பினை வழங்கியவர் இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி.

Hip Hop Tamizha - Only Kollywood

"ஆம்பள" படத்தின் மியூசிக் என்ட்ரியை தொடர்ந்து அடுத்தடுத்து கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் சரிவர பயன்படுத்திய ஆதி இன்று பாடகர்,நடிகர்,இயக்குனர் என தனது அடுத்த பரிமாணங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

Jayam Ravi, Nayanthara, Arvind Swamy ...

அந்த வகையில் ஆதியின் எவர் கிறீன் மியூசிக் ஆல்பமான "தனி ஒருவன்" அவருக்கான ஓர் அடையாளத்தையே உண்டாக்கியது.அண்மையில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் தள்ளியது.தனியொருவன் இரண்டாம் பாகத்தில்  இசைக்கான அறிவிப்புகள் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.

Thani Oruvan 2 Early 2024 | cinejosh.com

இந்நிலையில் "தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் இசை நீங்கள் செய்ய வேண்டுமென்பதே உங்கள் ரசிகர்கள் அனைவரதும் விருப்பம் இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? "  என்ற ரசிகரின் கேள்விக்கு "அது எதுவும் என் கையில் இல்ல ப்ரோடியூசர் மற்றும் இயக்குனர் கையில் தான் " என சிம்பிளாக பதிலளித்தார் ஹிப் ஹாப் ஆதி.

Advertisement

Advertisement