• Jan 19 2025

சுமார் 400 கோடியை அள்ளிய இந்தியன் 2 வசூல்... போஸ்டர் அடித்து கணக்கு காட்டிய கமல் பேன்ஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தை பிரபல இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். இந்த படம் சுமார் நான்கு ஆண்டுகள் கடின உழைப்புக்கு மத்தியில் வெளியானது.

இப்படத்தில் கமல்ஹாசன் உடன் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இந்த படத்தின் முதல் பாகம் ஹிட் அடித்ததால் இதன் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் இந்த படத்தின் ரிசல்ட் தவிடு பொடியாக்கியது. இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகமாக குவியத் தொடங்கின.

ஆனாலும் இந்த படத்திற்காக கமலஹாசன் எடுத்த ரிஸ்கை பலரும் பாராட்டினார்கள். இந்தியன் 2 பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் பயங்கர அடி வாங்கியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் வசூல் குறித்து கமலஹாசனின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் செம வைரலாகி வருகின்றது.


அதாவது வெறுப்பை பரப்பினாலும் நெருப்பிடம் பலிக்காது என்ற டயலாக் உடன் குறித்த போஸ்டரில் இந்தியன் 2 படம் 20 நாளை கடந்து 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அதற்கான விளக்கமும் கீழே கொடுத்துள்ளார்கள்.

அதாவது நெட்பிலிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை 220 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் இந்த படம் உலக அளவில் 180 கோடி வசூலித்ததாகவும், ஆகமொத்தம் 400 கோடி எனவும்  குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் இந்தியன் 2 திரைப்படத்தை உண்மையிலேயே  120 கோடிக்கு தான் நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement