• May 20 2026

கார்த்தி முதல் ஸ்ரீலீலா வரை… விஜய் - ராஷ்மிகா திருமண வரவேற்பின் அட்டகாசமான கிளிக்ஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டவும் ராஷ்மிகாவும் ஒருவரை ஒருவர் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து சில படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த அவர்கள் டேட்டிங் செய்ததாகவும் கூறப்பட்டது.

நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகினாலும், இருவரும் மௌனம் காத்தனர். அதேபோல், ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தன.

இதைத்தொடர்ந்து, இவர்கள் இருவரும் தாங்கள் காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், தங்களுடைய திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து தங்களுடைய காதலை உறுதிப்படுத்தினர். அதன்படி, இவர்களுடைய திருமணம் உதய்ப்பூரில் நடைபெற்றது.


இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தானாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றைய தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இருந்தும் ராதிகா, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியிருந்தனர். அதேபோல் நடிகர்கள் ராம் சரண், நானி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, நாக சைதன்யா, மகேஷ் பாபுவின் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement