லைகா நிறுவனம் தயாரித்து மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி திரைப்படம் நேற்று வெளியாகி ஓரளவுக்கு சிறந்த விமர்சனங்களினை பெற்று வருகின்றது.அஜித், திரிஷா, அர்ஜுன் ,ரெஜினா நடித்துள்ள இந்த படத்தின் முதல் பகுதி காதல் ,கல்யாணம் ,விவாகரத்து எனவும் இரண்டாம் பகுதி ஆக்சனில் முடிகின்றது என அதிகமானோர் கூறி வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் ஒரு சிலர் படம் ஆமை வேகத்தில் இருப்பதாகவும் அஜித்திற்காக படம் பார்க்க போகலாம் எனவும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இரண்டு வருடங்கள் கழித்து அஜித் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
நேற்று தமிழ் நாட்டில் வசூல் அளவு வெறும் 23 கோடி எனவும் அஜித் ரசிகர்கள் தொகையினை கூட்டி சொல்வதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகியள்ளது.இது ஒருபுறம் இருக்க இன்று இந்த படம் ஆறு கோடி வசூல் செய்வதே பெரிய அதிசயம் என்றும் மொத்தமாக இந்த படம் 35 கோடி share கொடுப்பதே கேள்விகுறி தான் எனவும் இப் படத்தினால் லைகா நிறுவனத்திற்கு 200 கோடி நஷ்டம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!