• Aug 03 2025

நான் யாரோட நின்னாலும் ஜோடி போடுறாங்க..! இவங்கள என்னதான் பண்ணுறது.?-லக்ஷ்மி பிரியா

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் இந்த சீரியல், குடும்ப உறவுகள், இளைஞர்களின் காதல் வாழ்க்கை மற்றும் சமூகப் பார்வை போன்றவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்த சீரியலில் முக்கியமான பாத்திரமாக நடித்துவரும் நடிகை லக்ஷ்மி பிரியா, தனது நடிப்பு மற்றும் இயற்கையான முகபாவனைகள் மூலம் சிறந்த பாராட்டைப் பெற்றுள்ளார். அத்தகைய நடிகை லக்ஷ்மி பிரியா சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், மகாநதி சீரியல் தற்போது பெறும் TRP (தொலைக்காட்சி பார்வையாளர்கள் மதிப்பீடு) மதிப்பெண் குறித்துப் பேசியுள்ளார். 


அவர் கூறியதாவது, "மகாநதி TRP இப்போது superஆ போய்கிட்டு இருக்கு. நாங்க செய்த உழைப்புக்கு கிடைக்கும் giftஆ தான் இதைப் பார்க்கிறேன்..." என்றார். இந்த வீடியோவில் மற்றொரு சுவாரஸ்யமான தகவலையும் லக்ஷ்மி பிரியா பகிர்ந்துள்ளார். சமீபத்தில், நடிகர் சபரி மற்றும் லக்ஷ்மி பிரியா, இருவரும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தனர். அந்த நிகழ்ச்சியின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

அந்த வீடியோக்களில் இருவரும் அருகில் நின்று உரையாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனைப்  பார்த்த ரசிகர்கள், "உங்களைப் பார்த்தாலே perfect ஜோடி போல இருக்கு!", "Real-life couple ஆனா ரொம்ப நல்லா இருக்கும்" என்று கமெண்ட்ஸ் தெரிவித்திருந்தனர்.


அந்த கமெண்ட்ஸ் குறித்து பேசும்போது, லக்ஷ்மி பிரியா சிரித்தபடி கூறியதாவது, "நான் யாரு கூட நின்னாலும் உடனே ஜோடி போட்டு சொல்லுறாங்க…நீங்க சொன்ன மாதிரி… நான் யாரோடயும் commit ஆனா, first-ஆ  உங்களுக்குத் தான் சொல்லுவேன்!" என்றார். இந்த வீடியோ தற்பொழுது யூடியூபில் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement