• May 31 2025

தோல்வி ,மகள் இறப்பு விஜய் ஆண்டனி வாழ்வில் தொடர் சோகங்கள்..! மனம் திறந்த பாலாஜி பிரபு..!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி.  தற்போது "மார்கன்" திரைப்படம் நடித்து வருகின்றார். சினிமா விமர்சகர், ஆஸ்கர் மூவிஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு விஜய் ஆண்டனி குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த சில விடயங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 


தொகுப்பாளர் விஜய் ஆண்டனி சேர்  பல கோடி கடன் பிரச்சனை  இருக்கின்றது. இதனால் தொடர்ந்து  நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. இது குறித்து அவருடை பதிலாக "விஜய் ஆண்டனிக்கும் முதன் முதலாக இயக்குநர் எஸ்.எ.சந்திரசேகருடன்  பழக்கம் ஏற்படுகின்றது. இதனை தொடர்ந்து அவருடைய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.


இதனை தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் வந்ததுடன் விஜய் ஆண்டனி முதல் முதலாக  நடித்த திரைப்படம் "நான்"  இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார். மேலும் அவரது மனைவி பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து தயாரிக்கவும் ஆரம்பிக்கின்றார். விஜய் ஆண்டனி தயாரித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி படங்களாக இருந்தன . இவர் நடிப்பில் இருந்த ஆர்வம் அதிகரித்த படியால் இசையமைப்பதை நிறுத்தி விட்டு முழு நடிகனாக , தயாரிப்பாளராக மாறுக்கின்றார்.


மேலும்  தொடர்ந்து நடித்த படங்கள் தோல்வி அடைய ஆரம்பிக்கின்றது. இந்த நிலையில் விஜய் ஆண்டனிக்கு யோசனை வருகின்றது. மறுபடியும் வெற்றி படம் தயாரிக்க வேண்டும் என்ன செய்யலாம் என்ற போது "பிச்சைக்காரன் 2" திரைப்படத்தினை தயாரிக்கின்றார். அந்த படத்திற்கான ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது கடலில் ஒரு காட்சி  ஃபைட் ஷுட் பண்ணும் போது பயங்கரமான ஆக்சிடென் ஆகின்றது. மீண்டும் ஃபைட் ஷுட் பண்ணும் போது அதிகமாக ஆக்சிடென் ஆகி கடலில் விழுந்து விட்டார். அவரை ஹொஸ்பிட்டல்ல அனுமதிக்கின்றார்கள். பல பிளாஸ்டிக்சேர்யரி  செய்து கொண்டு மீண்டு வந்தார்.  மீண்டு வந்த அவர் பல சரிவுகளை சந்திக்கின்றார். அதாவது படங்கள் தோல்வி ,மகள் இறப்பு எனப்பல  சரிவுகள் அவரது வாழ்வில் இடம் பெறுகின்றன. என்று குறிப்பிட்டார். 


பல படங்களில் சரிவுக்கான காரணம் எனப்பார்க்கும் போது ஒரு படத்தினுடைய இயக்குநர்களுக்குத்தான் தெரியும் காட்சி  அமைப்பு  எவ்வாறு அமைய வேண்டும் என்று .ஆனால் விஜய் ஆண்டனி எடிரிங்பக்கம்  தலையிட்ட  படியால் பல திரைப்படங்கள் தோல்வியை  சந்தித்தன. தொடர்ந்து  ஏன் இசையமைப்பதை நிறுத்தியது தவறு என சிந்தித்த போது  தன்னுடைய  இசை தோல்வி இல்லை தான் நிறுத்தியதாக எண்ணி தற்போது தொடர்ந்து இசையமைக்க உள்ளதாகவும் வருடத்தில் ஒரு படமாவது நடிப்பேன் எனவும் குறிப்பிட்டிருந்தார் .


Advertisement

Advertisement