• Sep 28 2025

கரூர் சம்பவத்திற்கு நிதியுதவி வழங்கிய விஜய்.. வெளியான முக்கிய அறிவிப்பு.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழக அரசியலில் கணிசமான இடத்தை பிடிக்க தொடங்கியுள்ள த.வெ.க கட்சி நேற்றைய தினம் கரூரில் நடத்திய பெரிய அளவிலான பொதுக்கூட்டம் பயங்கர கூட்ட நெரிசலாக மாறியதால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த மனதைக் கலங்கவைக்கும் சம்பவத்துக்குப் பின்னர், த.வெ.க தலைவர் மற்றும் பிரபல நடிகர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலையும், நிதி உதவியையும் அறிவித்துள்ளார்.


விஜய் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம், மற்றும் காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் த.வெ.க நேற்றைய தினம் நடத்திய பெரிய அளவிலான பொதுக்கூட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். மக்கள் நெரிசல் கட்டுப்பாட்டை இழந்ததால் 39 பேர் உயிரிழந்தனர், மற்றும் பலரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவ இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரிதும் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த துயரச் செய்தி வெளியாகிய பிறகு, விஜய் தனது பத்திரிகை அறிக்கையில் இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement