• Jan 18 2025

அந்த ஆளுக்கு அறிவில்லையா? விடுதலை-2 வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய இளையராஜா...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை 2. இது ரிலீசாவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தற்போது படக்குழு ஒரு ஷாட்வீடீயோவை வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வரும்நிலையில் டுவிட்டர் வாசி ஒருவர் இந்த விடீயோவில் வரும் வசனம் இளையராஜாவுக்கு இன்று நடந்த சம்பவத்தை எடுத்து காட்டுகிறது என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் குழம்பி அந்த பதிவுக்கு எதிராக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 


நடிகர் சூரி, நடிகர் விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் உட்பட பலரது நடிப்பில் டிசம்ப 20 வெளியாக இருக்கும் திரைப்படம் விடுதலை பாகம் 2. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது படக்குழு ஒரு ஷாட் வீடீயோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் " இங்க பார் என்ன மாதிரி படிக்காத ஒருத்தன் தண்டவாளத்தில் தலைவச்சி படுத்தனாலத்தான் உன்ன மாதிரி ஒருத்தன் படிச்சிட்டு வந்து இங்க உக்கார்ந்து இருக்க, தின்கிற சோத்தையும் பேசுற மொழியையும் மாத்திட்டா உன்ன அவனுங்க ஆளுன்னு ஏத்துப்பாங்களா?" என்று கேட்பது போல முடிவடைகிறது. 


இந்த வீடீயோவை ஷேர் செய்த ஒரு டுவிட்டர் வாசி அந்த வீடியோவிற்கு "விடுதலை2 வில்  இடம்பெறும் இந்த வசனம் ஏன் இன்றும் முக்கியம் என்பதை , இன்று அய்யா இளையராஜாவுக்கு  நடந்த நிகழ்வு உணர்த்தி இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் "நீக்க வேற சார் அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை" என்று போட்டுள்ளார். இன்னும் ஒருவர் "யோவ் கோயில் தமிழ்நாட்டுலதான்யா இருக்கு. அறநிலையத்துறையில ஒரு ஆர்டர் போட்டு எல்லாரையும் விடனும்னு சொல்லி பந்தோபஸ்து போட சொல்லுங்கய்யா,  அரசாங்கத்தால இந்‌த பிரச்சனைய பத்து நிமிஷத்துல தீர்க்க முடியும். ஆனா தீர்த்தா இங்க அரசியல் இல்ல. இத புரிஞ்சுக்காம நீங்க வேற இப்படி போட்டு இருக்கீங்க" என்று பதிவிட்டுள்ளார். 


மேலும் சிலர் இளையராஜாவை யார் உள்ளே போக சொன்னது?, கருவறைக்குள் பிராமின்கள் கூட போக முடியாது. பூஜை செய்யும் சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு. இது எல்லா மதத்திலும் உள்ளது. வெற்றிமாறனின் பிரிவினைவாத வசனத்திற்கு முட்டு கொடுக்க வேண்டாம், சங்கிகளுக்கும் ஜாதி வெறி பிடித்த நாய்களுக்கும் சரியான செருப்படி, அந்த ஆளுக்கு வெளிய கும்பிட தெரியாதா! எல்லாரும் போனால் இந்த ஆளுக்கு எங்க அறிவு போச்சு? என்று அந்த பதிவிற்கு பலரும் சாதகமாகவும், எதிராகவும் பேசியுள்ளனர். 


இவ்வாறு இசைஞானி இளையராஜா பேசுபொருளானதற்கு காரணம் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு சென்ற இவர் கருவறைக்கு முன் இருக்கும் அர்த்த மண்டபத்தில் நுழைந்தபோது, அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனால் அந்த மண்டபத்தின் படியருகே நின்று கொண்டே  இறைவனை தரிசித்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டே டுவிட்டர் வாசிகள் இவ்வாறு பேசி வருகிறார்கள்.


Advertisement

Advertisement