• Jan 27 2025

"என் அருமை மகள் பவதா " மகள் நினைவுநாளை முன்னிட்டு இளையராஜா உருக்கம்..!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

இளைய ராஜா குடும்ப வாரிசு பவதாரணி புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார்.தனது இனிமையான குரலினால் ரசிகர்களை கவர்ந்த இவர் தனது 47 வயதிலே இந்த உலகை விட்டு பிரிந்தார் பல அழகிய பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரியான பவதாரணியின் முதலாம் ஆண்டு நினைவிற்காக இளையராஜா தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.


குறித்த பதிவில் " என் அருமை மகள் பவதா எங்களை விட்டு பிரிந்த நாள் என்னுடைய கவனம் எல்லாம் இசையில் இருந்ததால் என்னுடைய பிள்ளைகளை கவனிக்காமல் விட்டது என்னுடைய தவறு மகளினுடைய பிறந்தநாள் அன்று நினைவு தினம் ஒன்றை ஒழுங்குபடுத்துவோம் அதில் அனைத்து இசையமைப்பாளரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றேன் "என கூறியுள்ளார்.


இறுதியில் எனது மகள் பவதாவின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் என மிகவும் மனமுடைந்து பேசியுள்ளார்.வீடியோ இதோ..

Advertisement

Advertisement