• Jan 22 2026

"அகண்டா 2" படம் அல்ல… அது இந்தியாவின் ஆன்மா.! இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு அதிரடிக் கருத்து!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் மட்டுமில்ல, இந்திய திரைப்பட உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் நடிகர் பாலையா நடிப்பில் வெளியான அகண்டா படமும் ஒன்றாகும். நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், அதிரடி, ஆன்மிகம், பெருமை, தர்மம் ஆகியவற்றை ஒரே கதையில் இணைத்து ஹிட் பட்டியலில் இடம்பிடித்திருந்தது. 


இப்போது அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள “அகண்டா 2 தாண்டவம்” திரைப்படம் குறித்து இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு கூறிய வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய ஊடக சந்திப்பில் ‘அகண்டா 2 தாண்டவம்’ குறித்து இயக்குநர், "அகண்டா தெலுங்கு படம் அல்ல. அது ஒரு இந்திய படம். அதுபோல, "அகண்டா 2 தாண்டவம்" படம் அல்ல... அது இந்தியாவின் ஆன்மா. தெலுங்கு ஆட்கள், தமிழ் ஆட்கள் வேறு வேறில்லை.. 


சகோதரர்கள் போன்றவர்கள். இப்படம் பார்த்து முடிக்கையில் சிவனே உங்கள் முன் தோன்றி ஒரு மெசேஜ் சொன்னதைப் போல இருக்கும். அந்த மெசேஜ், தேசம், தர்மம், தெய்வம் மற்றும் வேதம் இவற்றை அடித்தளமாக கொண்டது." எனக் கூறியுள்ளார்.

படம் 2025 டிசம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பிலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement