• Jul 27 2024

டிராப் ஆகிறதா இளையராஜாவின் பயோபிக் திரைப்படம்?! பெரும் ஏமாற்றத்தில் தனுஷ்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக போவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது என்பதும் பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த படம் உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இளையராஜா கேரக்டரில் நடிக்க இருப்பதை தனுஷ் பெருமையாக நினைத்திருந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதையில் தனக்கு திருப்தி இல்லை என்று இளையராஜா கூறியதாகவும் இதனை அடுத்து இயக்குனர் பால்கி இந்த படத்தில் இருந்து தூக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியானது.



இதனை அடுத்து தனுஷ் தனக்கு மிகவும் நெருக்கமான மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் ஆகிய இரண்டு இயக்குனர்களை இளையராஜாவிடம் அனுப்பி வைத்ததாகவும் ஆனால் அவர்கள் இருவரும் இந்த படத்திற்கு சரியாக வராது என்று இளையராஜா அவர்களை திருப்பி அனுப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தனுஷ் இந்த படத்தை தயாரிக்க விரும்பிய நிலையில் இளையராஜா நானே சொந்தமாக தயாரிக்கிறேன் என்று கூறிவிட்டதால் தனுஷ் ஏமாற்றம் அடைந்து இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் எனது படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பதை நானே  முடிவு செய்து கொள்கிறேன், அதுவரை பொறுமையாக இருங்கள் என தனுஷிடம் இளையராஜா கூறி இருப்பதாகவும் இதனால் தனுஷ் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் அவரும் இந்த படத்தில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் இந்த படத்தின் அடுத்த ஸ்டெப் கூட இன்னும் வளராத நிலையில் இந்த படம் டிராப்பாக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

Advertisement