• Apr 26 2024

அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகுது என்றால் அந்த பாதிப்பு தான் காரணம்- ஆயிஷா குறித்து பயில்வான் கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 இரண்டு வாரங்களை கடந்து 3வது வாரத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜி.பி. முத்து, சாந்தி ஆகிய 2 பேரும் வெளியேறி உள்ளதால் தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர்

மேலும் நேற்றிலிருந்து பொம்மை டாஸ்க் என்ற ஒன்று ஆரம்பித்துள்ளது. இதனால் போட்டியாளர்களுக்கிடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக தனலக்ஷ்மி அசீம் ஆகியோருக்கிடையிலேயே மோதல் அதிகமாக உருவாகி வருகின்றது.


அத்தோடு இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் ஆயிஷா.இவருக்கு அடிக்கடி இந்த நிகழ்ச்சியில் உடல் நிலை சரி இல்லாமல் போகின்றது. இதனால் ஹவுஸ்மேட்களும் கொஞ்சம் கடுப்பாகியுள்ளனர்.

இந்த நிலையில் ஆயிஷாவுக்கு ஏன் உடல் சரியில்லாமல் போகின்றது என்பது குறித்து பயில்வான் ரங்க நாதன் ஒரு் பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஆயிஷா தன்னை சீரியலில் அறிமுகப்படுத்திய தேவ் என்பவரைத் தான் முதலில் காதலித்து வந்ததோடு அவருடன் 4 வருடங்கள் வாழ்ந்தார்.


பின்னர் அவரை பிரேக் கப் பண்ணிட்டு சீரியல் நடிகருடன் தொடர்பில் இருந்தார். தற்பொழுது அவரையும் கழட்டி விட்டிட்டு தற்பொழுது வேறொருவருடன் தொடர்பில் இருக்கின்றார். எனவே இவருக்கு காதல் மோகம் அதிகமாக இருப்பதாலும் அவருடைய நினைப்பு அதிகமாக இருப்பதாலும் தான் உடல் நிலை சரி இல்லாமல் போவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.இவரின் இந்த கருத்து வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement