• Dec 01 2022

தமிழகத்தில் வசூல் சாதனை படைத்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்..எவ்வளவு தெரியுமா..?

Listen News!
lathushan / 1 month ago
image
Listen News!

சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும் நடிகரும் பாடலாசிரியரும் ஆவார். மேலும் தனது மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர் ஆவார்.


இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார். அதன் பிறகு இவர் பல திரைப்படங்கள் நடித்தார். இவர் நடித்த டான், வருத்தப்படா வாலிபர் சங்கம், மாபெரும் வெற்றி பெற்றது.


மேலும் இவர் நடித்த டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதிலிருந்து முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது, அனூப் என்பவர் இயக்கியிருக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி இருக்கிறது.


இந்நிலையில் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் தமிழகத்தில் மட்டும் 5 நாள் முடிவில் ரூ. 23 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.