• May 04 2026

விஜய் ஆட்சியை பிடித்தால் அதற்கு காரணம் இவங்க தான்! 'ஸ்லீப்பர் செல்' பற்றி கூல் சுரேஷ்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

 தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் யார் முதல்வர் என்ற கேள்விக்கான பதில் இன்று வெளியாக உள்ளது. அதன்படி காலை 8:30 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் மும்முரமாக நடைபெற உள்ளன.

இந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என பலரும் தங்களுடைய நம்பிக்கையை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலமும் காமெடி நடிகருமான கூல் சுரேஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, விஜய் வெற்றி பெற்றால் “இவர்கள் இருவர்தான் காரணம்” என ஜூலியையும் சாட்டை துரைமுருகனையும் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் தெரிவித்த கருத்துகள் வைரலாகி வருகின்றன.

அதன்படி அவர் கூறுகையில், “விஜய் சார் தான் முதலமைச்சர் ஆவார் என்று நிறைய பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஜெயித்தால், அதற்கு காரணம் ரசிகர்களோ தொண்டர்களோ இல்லை; இரண்டு பேர் தான் – ஒருவர் ஜூலி, மற்றொருவர் சாட்டை துரைமுருகன்.


ஏனெனில் விஜய் சார், உங்களுக்காக அவர்கள் இருவரும் அயராது பாடுபட்டு ப்ரமோஷன் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தான் தவெகவின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆக இருந்து உங்களை முதலமைச்சராக்க செயல்பட்டார்கள்.

பலர் பல இடங்களில் விஜய் சார் தான் முதலமைச்சர் ஆவார் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் ஜெயித்தால் அதற்கு காரணம் ரசிகர்களோ, தொண்டர்களோ, பொதுமக்களோ இல்லை; ஜூலியும் சாட்டை துரைமுருகனும் தான்.

ஓட்டு எனக்கு போடுங்கள் என்று சொன்னால் மக்கள் போட மாட்டார்கள். ஆனால் ‘போடாதீர்கள்’ என்று சொன்னால் அதற்கு எதிராகவே செய்கிறார்கள். அதேபோல் ஜூலி மற்றும் சாட்டை துரைமுருகன் விஜய்க்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறியதால் மக்கள் மனதில் அது பதிந்து, விஜய்க்கே ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

அதனால், விஜய் சார் ஆட்சியை பிடித்தால் அதற்கு காரணம் அந்த இருவர்தான்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement