தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல இடங்களிலும் நேரடியாகச் சென்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
விஜய் சினிமாவில் இருக்கும்போதே அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டினார். லியோ படத்தின் வெற்றிக்குப் பிறகு அரசியலில் களம் இறங்குவதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன்படி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி, கொடி, பாடல், செயல் திட்டங்கள் என அத்தனையும் உரிய முறையில் செயல்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார். அதன் பின்பு அவருடைய சினிமா வாழ்க்கையிலும், அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வரத் தொடங்கின.
அதன்படி ஜனநாயகன் படம் ஜனவரியில் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் சென்சார் போர்டு பிரச்சனையால் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இறுதியில் இந்தப் படம் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் லீக் ஆகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல விஜயை விவாகரத்து செய்வதாக அவருடைய மனைவி அறிவித்ததாகவும் பொதுவெளியில் பல தகவல்கள் வெளியாயின. அதிலும் அவருக்கும் ஒரு நடிகைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்னொரு பக்கம், விஜய் மேற்கொண்டு வரும் பிரச்சார நடவடிக்கைகளின்போது அவருக்கு உரிய நேரமும் இடமும் வழங்காமல் பல தடைகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் அதையும் தாண்டி அவர் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், சின்னத்திரை நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான தினேஷ் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். இதன்போது புரூஸ்லீ ஆனந்த் அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன. மேலும் தினேஷ் தன்னுடைய பதிவில், "விஜய் கண்ட கனவு, அந்தத் தூய அரசியல் அமைப்பிற்காக உழைப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
Listen News!