• May 05 2026

ஸ்வேதாவுக்கு அடித்ததை ஒப்புக்கொண்ட ஆதி; ஆனாலும் இப்படியொரு குசும்ப எதிர்பார்க்கலையே.!

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக நடிப்பவர் நடிகை ஸ்வேதா. இவர் அந்தச் சீரியலில் தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களின் பேரன்பைப் பெற்றுள்ளார். இவருக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகிறது.

சின்ன மருமகள் சீரியலில் கர்ப்பமாக இருக்கும் தமிழ்ச்செல்வி, டாக்டர் ஆக வேண்டும் என்ற தன் கனவுடன் தினமும் போராடி வருகிறார். அவர் கணவரை பிரிந்து எதிர்கொள்ளும் சவால்கள் நாளுக்கு நாள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்னொரு பக்கம், நடிகை ஸ்வேதாவின் திருமண விவகாரம் சர்ச்சையாகக் காணப்படுகிறது. அவர் காதலித்து திருமணம் செய்தவர் தவறானவர் என்று புரிந்துகொண்டு, அவரிடமிருந்து விலகி விவாகரத்து கோரியுள்ளார்.


இதற்கிடையில் சின்ன மருமகள் சீரியலில் நடித்த தாமரைச்செல்வி, ஸ்வேதாவின் கணவர் ஆதி தன்னிடம் பண மோசடி செய்ததாகவும், மூன்று சவரன் தங்கச் செயின் வாங்கி விற்று ஏமாற்றியதாகவும் புகார் கொடுத்தார். தொடர்ச்சியாக அவர் பற்றிய மோசடி விவரங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஸ்வேதாவின் கணவர் ஆதி தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவரிடம் "நடிகை ஸ்வேதாவை நீங்கள் அடித்தீர்களா?" என்று கேள்வி கேட்கப்பட்டது. 

முதலில் இல்லை என மறுத்தவர், பிறகு "ஆம், அடித்தேன்" என ஒப்புக்கொண்டார். ஆனாலும் "நீங்கள் நினைப்பது போல நான் அவரை அடித்துத் துன்புறுத்தவில்லை. எங்களுடைய மொழியில் அடிப்பது என்றால் முத்தம் கொடுப்பது போன்றதுதான். அதைத்தான் அடித்தேன்" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement