• Aug 22 2025

மாதவனோ.. கமலோ..! என் பேரன பேச வச்சு வீடியோ எடுப்பேன்..! ரோபோ சங்கரின் வைராக்கியம்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனது காமெடி மூலம்  ரசிகர்களை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இதைத் தொடர்ந்து   காமெடி நடிகராக படங்களில் நடித்து வந்த ரோபோ சங்கர், தற்போது கதாநாயகனாகவும் களமிறங்கியுள்ளார். 

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா  சங்கரும் பிகில் படத்தின் மூலம்  தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதில்  பாண்டியம்மா என்ற இவருடைய கேரக்டர்  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. அதன் பின்பு தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் திருமணம் செய்து  தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி  சினிமாவிலிருந்து விலகி காணப்படுகின்றார். 

இந்த நிலையில், ரோபோ சங்கர்  நடித்துள்ள சொட்ட சொட்ட நனையுது படத்தின் ப்ரோமோஷனல் கலந்து கொண்டு  பேசுகையில்  தனது மகள் பற்றியும் பேரன் பற்றியும்  மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார். 


அதன்படி அவர் கூறுகையில் ,  தனது மகள்  பிறந்தது முதல் அவர் வளரும் வரை என்னால் அவருடன் கூட நேரத்தை ஒதுக்க முடியவில்லை.  தொடர்ச்சியாகவே  வேலைகளில் கவனம் செலுத்தினேன். காலையில் ஜப்பானில் இருந்தால் மாலையில் லண்டனில் இருப்பேன். அப்படி  உலகம் முழுவதும் சுற்றித்திரிந்தேன்,   இந்திரஜிதாவை அவருடைய அம்மா தான் முழுக்க முழுக்க வளர்த்தார், கவனித்தார். நான் வீட்டிற்கு வந்து அடுத்த  பெட்டியை மாற்றி விட்டு பயணம் செல்ல சரியாக இருக்கும். அப்படித்தான் எனது வாழ்க்கை இருந்தது. 


ஆனால் எனது பேரனை கையில் வாங்கும் போது அந்த உணர்ச்சியை சொல்லவே முடியவில்லை. அதை அனுபவித்தால் தான் முடியும்.  இப்போது எனது பேரன் 10 நிமிடங்கள் வரை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டுள்ளார் .   அவன் பேச ஆரம்பிக்கும் போது  மாதவன் போலையோ கமலஹாசன் போலையோ ஒரு டயலாக் சொல்லி  வீடியோ எடுத்து வைப்பேன். 

மேலும் திருமணத்திற்கு பிறகு இந்திரஜிதாவை நடிக்க வேண்டாம் என்று நீங்கள் தான் கூறினீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு, திருமணத்திற்கு பிறகு நான் அவளை நடிக்க வேண்டாம் என்று கூறவில்லை.  நான் எனது மகளுடைய விஷயத்தில் தலையிடுவதில்லை. அவர் பல திறமைகளை கொண்டு உள்ளார்.  அதனால்  தான் எல்லா மேடையும் முக்கியம் எதையும் விட்டு விடாதே..  எல்லா இடங்களிலும் உனது திறமையை காட்டு என்று  சொல்லி தான் வளர்த்தேன் என ரோபோ சங்கர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement