• Jul 02 2025

"அவரை கண்டிப்பாக பாட வைப்பேன்.." பிரபல இசையமைப்பாளர் உறுதி..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் பாடல்களையும் பாடகர்களையும் மிகவும் கொண்டாடி வருகின்றனர் . சமீபத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டில் பாடகி சின்மயி பாடிய பாடல் செம ஹிட்டாகி யூடியூபில் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது.


இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக நடந்த ‘Ban’ பிரச்சாரம் மீண்டும் பேசப்படத் தொடங்கியது. இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி “சின்மயி பாடியதை கேட்டதும் நான் பெருமையாக நினைத்தேன். விரைவில் இசையமைக்க உள்ள படங்களில் அவரை கண்டிப்பாக பாட வைப்பேன்” என தெரிவித்திருக்கிறார்.


ஏற்கனவே விஜய் ஆண்டனி இசையமைத்த பல பாடல்களில் சின்மயி பாடி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் சின்மயி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement