• Sep 20 2024

நான் படிக்காததால் வாழ்க்கையில் கஷ்டப்பட்டேன்; ரசிகர்களுக்காக மனம் திறந்த அஜித்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நம்பர்-1 ஹீரோக்களில் ஒருவராக அன்றும் இன்றும் வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 60-இற்கும் மேற்பட்ட தமிழ் மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் தனது வாழ்க்கை சக்கரத்தில் எப்போதுமே வெற்றியை மட்டுமே சந்தித்த நடிகரல்ல. பல ஏற்ற இறக்கங்களையும், வெற்றி தோல்விகளையும் கடந்து தான் இன்று அனைவராலும் தல அஜித் என்று சொல்லுமளவிற்கு வளர்ந்திருக்கின்றார். சாதனைகளைக் கடந்து ஒரு சில சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் இன்றும் தமிழ் சினிமாவில் பலராலும் மதிக்கப்படுகின்ற மரியாதைக்குரிய ஒருவராகவே பார்க்கப்படுகின்றார்.

இந்நிலையில் 'அமராவதி' யில் ஆரம்பித்து இன்றுவரை பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவரின் நடிப்பில் சமீபத்தில் 'வலிமை' படம் வெளியாகி இருந்தது. இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவிலான வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது எச்.வினோத் இயக்கத்திலும் அஜித்தின் நடிப்பிலும் 'ஏகே 61' என்ற திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இவ்வாறாக பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அஜித்குமார் ரசிகர்களுக்கு எப்போதும் தனது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருபவர். அதாவது சமீபத்தில் கூட அஜித் தன்னை தல என அழைக்க வேண்டாம் ஏகே என அழைத்தால் போதும் என கூறியிருந்தார். இதேபோன்றே தற்போதும் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றினை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்காக தன்னை பற்றி தானே குறிப்பிடுகையில் "பொறந்தால் அஜித் மாதிரி தான் பொறக்கணும் என சொல்லுவார்கள். உண்மையை சொல்லப்போனால் நான் திரை வாழ்க்கையில் பல கஷ்டங்கள் பட்டுள்ளேன். 30 வயதில் நம்மால் எதையும் செய்ய முடியும் என்று தோன்றும். அதே 40 வயதில் நம்மை மீறி ஒரு சக்தி இருக்கு அதுதான் தீர்மானிக்கும் என்று தோணும்" எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் "நான் காலையில் இந்த வீட்டில் கடவுளை வணங்கும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன், அவர்களுக்கு நன்றி சொன்னால் மிகையாகாது. யாருக்காகவும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காதீர்கள். 100% உழையுங்கள். நான் படிக்காததால் வாழ்க்கையில் கஷ்டப்பட்டேன். படித்திருந்தால் ஓரளவிற்கு கஷ்டப்படாமல் இருந்திருப்பேன். அதனால் அனைவரும் படியுங்கள். யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. சிம்பிளாகச் சொன்னால் வாழுங்க வாழ விடுங்கள்" என கூறியுள்ளார்.

இதையெல்லாம் நம்ம தல அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு அண்ணன் என்கின்ற ஸ்தானத்தில் இருந்து உரிமையாக பேசியிருக்கிறார். இவ்வாறு இவர் வெளியிட்டிருக்கும் இந்த வேண்டுகோள் அஜித் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திழுப்பது மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகியும் வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement