• May 21 2024

மணிரத்னம் வேட்டி அணிந்து வர வேணாம் என்றாரா?..புதுப் புரளியை கிளப்பும் ப்ளூ சட்டை மாறன்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரமாண்டமாக உருவாகி வரும் மணிரத்னத்தின் கனவுப்படம் 'பொன்னியின் செல்வன்' தமிழ் மன்னனான ராஜா ராஜா சோழன் குறித்த கல்கியின் உடைய பொன்னியின் செல்வன் நாவலை பின்பற்றியதாக அமைந்திருக்கின்றது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் உடைய கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த டீசர் ஆனது வெளியாகி ஒரு சில நாட்களையே கடந்துள்ள நிலையில் தற்போது 20 மில்லியன் வியூவர்ஸை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு நடுவே இந்த விழா குறித்தான ஒரு சர்ச்சையும் கிளம்பி இருக்கின்றது.

அதாவது இந்த விழாவிற்கு வந்த திரைப்பிரபலங்களின் பேச்சு வைரலானதோ இல்லையோ அவர்கள் அணிந்து வந்த உடை தொடர்பாக தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம், ஐஸ்வர்யாராய் தவிர்ந்த மற்ற நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்திருந்தனர். மேலும் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார் உள்ளிட்டோர் வெஸ்டர்ன் ஸ்டைல் உடையணிந்து வருகை தனித்திருந்தனர்.

இதைப்பார்த்து விட்டு பஞ்சாயத்திற்கே தலைவரான நம்ம ப்ளூ சட்டை மாறன் சும்மாவா இருப்பாரு?. இதை வைத்து புதிய சர்ச்சை ஒன்றினைக் கிளப்பியுள்ளார். அதாவது இந்த விடயம் தொடர்பாக இவர் கூறுகையில் "தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வரக்கூடாது என இயக்குநர் மணிரத்னம் கோரிக்கை விடுத்தாரா? அல்லது ஆர்டர் போட்டாரா? ஏன் யாருமே வேட்டி அணிந்து டீசர் வெளியிட்டு விழாவிற்கு வரவில்லை" என்று தனது பாணியில் கேள்வி ஒன்றினை எழுப்பி உள்ளார்.

இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தற்போது இது தான் நெட்டிசன்களின் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement