• Oct 08 2024

என்னது "கோட்" ட்ரெய்லர்ல தோணி இருக்குறாரா? நான் பாக்கவே இல்லையேபா!!!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய்யின் நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான GOAT திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று இதன் ட்ரெய்லர் 5 மணியளவில் வெளியாகி ஏராளமான ரசிகர்களின் பார்வையை பெற்றது. தற்போது இந்த படத்தில் தோணி இருப்பதாக செய்தி தீயார் பரவி வருகிறது.  


இந்நிலையில் நேற்று வெளியான GOAT ட்ரைலரின் மூலம் வெங்கட் பிரபு விமர்சனங்களை எல்லாம் பாராட்டுகளாக மாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவிற்கு ட்ரைலர் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துவிட்டது. விஜய் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் சினிமா விமர்சகர்களும் இந்த ட்ரைலர் திருப்திபடுத்தியது என்றே தெரிகின்றது.


ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் படத்தின் கதை என்னவாக இருக்கும் என டீகோட் செய்ய துவங்கிவிட்டனர். ஆனால் ட்ரைலரில் படத்தின் கதையை வெங்கட் பிரபு முழுவதுமாக போட்டு உடைக்கவில்லை. எனவே தான் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. 


GOAT படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுவது மட்டும் உறுதி என தகவல் வந்துள்ளது. ஐ.பி.எல் போட்டி நடக்கும் ஸ்டேடியத்தில் தான் GOAT கிளைமாக்ஸ் காட்சி நடப்பதை போல வெங்கட் பிரபு படமாக்கியுள்ளாராம். மும்பை மற்றும் சென்னை இடையே நடக்கும் அந்த போட்டியில் CSK மற்றும் தோனியின் ரெபரென்ஸ் அதிகம் இருக்கும் என்றும் பேசப்படுகின்றது. அப்போது விஜய் மற்றும் தோணி ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரில் கேட்டும் என இணைய வாசிகள் கூறிவருகின்றனர்.  

Advertisement