• Jan 26 2026

3ஆயிரம் பாடலுக்கு மேல் எழுதினேன்.. இன்று வரை யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை.! சினேகன்

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பாடலாசிரியர்களின் பங்களிப்பு திரைப்பட வெற்றிக்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில், 3000க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதிய அனுபவம் கொண்ட பாடலாசிரியர் சினேகன் சமீபத்தில் நடந்த ‘கொம்புசீவி’ திரைப்பட நிகழ்வில் தனது அனுபவங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.


நிகழ்ச்சியில் பேசிய அவர், “3 ஆயிரம் பாடலுக்கு மேல் எழுதியுள்ளேன். ஆனால் இன்று வரை யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. ஆனால் முதல் முறையாக கொம்புசீவி படத்தில் பாடல் எழுத பொன்ராமிடம் வாய்ப்பு கேட்டேன். அது என் அண்ணன் கேப்டனுக்காக மட்டும் தான்.” என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் உணர்ச்சிபூர்வமாக்கியது.


இப்படம் இயக்குனர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகி வருகிறது. அவர் தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்கள் மற்றும் கலகலப்பான கதாபாத்திரங்களால் அறியப்படுகிறார். ‘கொம்புசீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன், தார்னிகா உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் கதைக்களம் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘கொம்புசீவி’ திரைப்படம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement