தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த விக்ரம் இப்பொழுது தனது 62வது படமான ‘வீர தீர சூரன்’ படம் மூலமாக மீண்டும் திரையுலகத்தில் களமிறங்கியுள்ளார். இப்படம் மார்ச் 27ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தற்பொழுது இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று மதுரையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற சிறப்பு விழாவில் விக்ரம் மற்றும் அவரது படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
படத்தை விழிப்புணர்வுடன் விளம்பரப்படுத்தும் முயற்சியாக மாணவிகளை நேரில் சந்தித்துள்ளார் விக்ரம்.அதன்போது விக்ரம் மிகவும் ஸ்டைலாகவும் மாஸாகவும் காணப்பட்டார். அத்துடன் அந்நிகழ்வில் விக்ரம் கூறிய ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறியதாவது, “முன்பெல்லாம் காதல் தோல்வி வந்தா தான் தாடி வளர்ப்பாங்க...ஆனால் இப்போ காதலிக்கத் தான் தாடி வளர்க்குறாங்க.." என்றார். அத்துடன் தானும் அதற்காகவே எல்லாப் படங்களிலும் தாடியுடன் நடிப்பதாகவும் கூறியுள்ளார். விக்ரமின் இக்கருத்து அங்கிருந்த மாணவிகள் அனைவரையும் ஈர்த்துள்ளது.
விக்ரம் பல ஆண்டுகளாகவே தனது படங்களில் தாடியுடன் வரும் கதாப்பாத்திரங்களைத் தேர்வு செய்து வருகின்றார். ஒரு காலத்தில் அவரது ‘காதலன்’ படத்தில் சின்ன பையன் லுக்கில் இருந்த விக்ரம் இன்று ஒரு தீவிரமான நடிகராக மாறியுள்ளார்.
அந்தவகையில் தாடி என்பது விக்ரமின் அடையாளமாக காணப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் விக்ரம் நடித்து முடித்துள்ள வீர தீர சூரன் படத்தினை இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படம் குடும்பம், காதல் மற்றும் மனிதநேயத்தினை ஆழமாக பிரதிபலிப்பதாக காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
Listen News!