• Mar 29 2025

மனோஜிடம் இருந்து ரோகிணியைப் பிரிக்கும் விஜயா..! இரண்டாகப் பிளந்த குடும்பம்...!

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா ரோகிணிய அடிக்கிறதப் பாத்து அண்ணாமலை ஆத்திரப்பட வேணாம் என்று சொல்லுறார். மேலும் ரோகிணி ஏதோ சொல்லவாறாள் அத என்னனு தான் கேப்போம் என்கிறார். அதைக் கேட்ட விஜயா என்ன கேக்கச் சொல்லுறீங்க இவளா நாள் அவளின்ர பேச்சைக் கேட்டது போதாதா இதுக்கு மேலையும் அவளின்ர பேச்சைக் கேக்கணுமா என்று கேக்கிறார். இதைக் கேட்ட ரோகிணி பிளீஸ் ஆன்டி நீங்க என்னைய திட்டுங்க அடிங்க என்ன வேணும் என்றாலும் பண்ணுங்க நான் சொல்லுறத மட்டும் கொஞ்சம் கேளுங்க என்கிறார்.

அதுக்கு விஜயா நீ எனக்கு ஒன்னும் சொல்லத் தேவையில்ல இங்க இருந்து வெளில போ என்கிறார். அதுக்கு மீனா முத்துவப் பாத்து ஏன் உங்கட அண்ணா எதுவுமே சொல்லாம இருக்காரு என்று கேக்கிறார். அதுக்கு முத்து அவன் அதிர்ச்சில இருக்கான் அதுதான் அமைதியா இருக்கான் என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து விஜயா இதுக்கு மேலையும் உன்ன என் பையன் கூட வாழவிடமாட்டேன் என்று ரோகிணியப் பாத்து சொல்லுறார்.


அதுக்கு ரோகிணி இல்ல ஆன்டி நான் போக மாட்டேன் இது ஏன் வீடு என்கிறார். மேலும் ரோகிணி சொல்லுற கொஞ்சம் கேளு என்று அண்ணாமலை சொல்லுறார். அதுக்கு விஜயா என்ர கோபத்த கூட்ட வேணாம் என்கிறார். இதைக் கேட்ட ரோகிணி இல்ல ஆன்டி நான் மனோஜ விட்டுப் போக மாட்டேன் என்கிறார். இதனை அடுத்து ரோகிணிய வீட்டை விட்டு வெளியேற்றி இனிமேல் இங்க வரவே கூடாது என்கிறார் விஜயா.

அதுக்கு அண்ணாமலை விஜயாவப் பாத்து அவள் என்ன சொல்ல வாறாள் என்கிறத நீ கேட்டிருக்கோணும் என்கிறார். மேலும் மனோஜைப் பாத்து ரோகிணிய கூட்டிக்கொண்டு வா என்று சொல்லுறார். அதைக் கேட்ட மனோஜ் எதுவும் கதைக்காமல் அமைதியாக இருக்கிறார். அதனை அடுத்து அண்ணாமலை மனோஜைப் பாத்து ரோகிணியோட இந்த விஷயம் பற்றிக் கதை என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement