• Oct 09 2024

உங்க பிரண்ட்ஷிப்பே வேணாம்.. எல்லாத்துக்கும் தேங்க்ஸ்! திடீரென உஷாரான விஷ்ணு! அதிர்ச்சியில் பூர்ணிமா

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 60 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.  கடந்த ஆறு சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வெடித்து வருகிறது.

தற்போதுள்ள போட்டியாளர்கள் முட்டி மோதிக் கொண்டு தங்களுடைய விளையாட்டை வெளிப்படுத்தி, ரசிகர்களை கவர முயற்சித்து வருகின்றனர். 

ஒரு வீடாக இருக்கும் போதே பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும் நிலையில்,  இரண்டு வீடு என்றால் சொல்லவா வேண்டும்?. இரண்டு குழுவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்வது மட்டுமின்றி, போட்டி பொறாமையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் காதல் ஜாடையில் பேசிக் கொண்டு வந்த பூர்ணிமா, விஷ்ணுவுக்கு இடையில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது. 


அதன்படி,  ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா 'பார்க்கிங்' திரைப்படத்தின் புரமோஷன் பணிக்கு வந்து சென்ற பின்னர் விஷ்ணுவின் நடவடிக்கையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, நேற்றைய தினம் திடீரென பூர்ணிமாவிடம் பேசிய விஷ்ணு, 'உன்ட நட்பு எனக்கு தேவை இல்ல, நீ இனிமேல் என்னை பற்றி எதுவும் பேசாத, என் கூடவும் பேசாத, இத்தோடு அனைத்தையும் முடித்துக் கொள்வோம், எல்லாத்துக்கும் தேங்க்ஸ்' என்று கூறியது பூர்ணிமாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


எனினும், ஏன் இப்படி சொல்லுறீங்க? என்ன நடந்த என பூர்ணிமா விசாரிக்கவும், உன் கூட பேசினா நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கு என விஷ்ணு சொல்ல,  'என்னால நெகட்டிவிட்டியா? என பூர்ணிமா மறுபடியும் கேட்க, 'எனக்கு நெகட்டிவிட்டி' என்று கூறி சமாளிக்கிறார் விஷ்ணு.

இவ்வாறு பூர்ணிமாவின் நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணுவுக்கு திடீரென என்ன ஆனது என தெரியவில்லை. பூர்ணிமாவும் குழப்பத்தில் இருக்கின்றார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.



 

Advertisement