• Jan 19 2025

தமிழுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை மேக்னாவிடம் சொல்ல போன நமச்சி- அர்ஜுனுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்-Thamizhum Saraswathiyum Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழ் தன்னுடைய கம்பெனி விஷயம் குறித்து மேக்னவிடம் பேசுகின்றார்.மேக்னா நீங்க லோன் எதுவும் வாங்க வேணாம். ப்ரீயாக வேலை செய்யுங்க எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று அனுப்பி வைக்கின்றார்.தொடர்ந்து தமிழ் ஆபிஸிற்கு வந்ததும் அங்கு அர்ஜுன் கம்பெனியில் வேலை செய்பவர்கள் வந்து பேசுகின்றனர்.


அர்ஜுன் வேலை அதிகமாக வாங்குவதாகவும் சம்பளம் ஒழுங்காகத் தருவதில்லை என்றும் தங்களையும் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்க்குமாறு கூறுகின்றனர். இதனால் தமிழ் நமச்சியிடம் சொல்லி அவர்களை தனது கம்பெனியில் வேலைக்கு சேர்த்துக் கொள்கின்றார்

இந்த விஷயத்தை அறிந்த அரஜுன் தமிழைப் பழி வாங்க வேண்டும் என்பதற்காக மேக்னா வீட்டுக்குச் செல்கின்றனர். அங்கே தமிழ் ஏற்கனவே கல்யாணம் பண்ணிட்டான் என்ற விஷயத்தைச் சொல்ல மேக்னா அர்ஜுனை வெளியே அடித்துத் துரத்துகின்றார். அர்ஜுன் அப்படி மேக்னாவிடம் முகத்தடி வாங்கியதைப் பார்த்த நமச்சி நக்கலடிக்கின்றார்.


பின்னர் தமிழ் நிறைய கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறான். இப்போ தான் சந்தோசமாக இருக்கிறான், அதுக்காகத் தான் பொய் சொன்னேன்.நானே போய் உண்மையை சொல்லுறது தான் நல்லம் என நமச்சி சாமிகிட்ட வேண்டிட்டு போய், மேக்னாவிடம் பேசுகின்றார்.

தனக்கு தமிழ் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லி விட்டு தமிழுக்கு கல்யாணம் என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது. 

Advertisement

Advertisement