• Apr 03 2025

"நானும் அங்கிருந்து வந்தவன்தான்” மனவருத்தத்துடன் பேசிய யூட்யூபர் இர்ஃபான்...

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

சமூக ஊடகங்கள் இன்றைய வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றன.இதனை பயன்படுத்தி பலர் சமூக சேவை மற்றும் மக்களுக்கு உதவி செய்யும் முறையில் செயல்படுகின்றனர். இந்த வகையில் பிரபல யூடியூபர் இப்ரான் மற்றும் அவரது மனைவி சமீபத்தில் மக்களுக்கு உணவளிக்கும் ஒரு செயலை பதிவிட்டனர். ஆனால் இந்த செயல் தற்போது பலரிடம் விமர்சனங்களை சந்தித்துள்ளது.


இப்ரான் மற்றும் அவரது மனைவி மக்களுக்கு உணவு வழங்கும் வீடியோவை தனது யூடியூப் வ்லோகில் பகிர்ந்தார். அவர்கள் இந்த உணவுகளை காரிலிருந்தே மக்களுக்கு வழங்கி அதை "சமூக சேவை செய்யும் பசுமை முயற்சி" என்று பதிவிட்டு இருந்தனர். ஆனால் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பலவகையான கருத்துகளை ஏற்படுத்தியது.


இந்த செயலை கடுமையாக விமர்சித்தவர் பிரபல VJ பார்வதி. இவர் தனது கருத்துக்களில் "சமூக சேவை செய்யுறம் என்று இந்த புதுப் பணக்காரங்க செய்யுற வேலை இருக்கே தாங்க முடியல என்றார். மேலும் சமூக சேவை செய்ய வெளிக்கிட்டாப் பிறகு பாதுகாப்பு எல்லாம் பார்க்கக் கூடாது" எனவும் கூறியிருந்தார். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இர்ஃபான் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் "முன்னேற்பாடுகள் ஏதுமில்லாமல் மனைவியுடன் காரில் சென்று உதவி செய்ததால், சூழலை கையாளத் தெரியவில்லை; அதில் திணறி சில விஷயங்கள் செய்துவிட்டேன். அதற்காக மனம் வருந்துகிறேன் கஷ்டப்படுகிறவர்கள் மேல் Care இல்லையென சிலர் சொல்கிறார்கள்; அப்படியல்ல. நானும் அங்கிருந்து வந்தவன்தான்” என மனவருத்தத்துடன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement