• Jul 27 2024

கோடி கோடியாக கல்லா கட்டும் அரண்மணை 4 ... இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியாகி சக்கப் போடு போட்டு வரும் படம் தான் அரண்மனை 4. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்து இருந்தார்.

பிரபல ஹீரோக்களை நம்பி சுந்தர்.சி எடுத்த படங்கள் எல்லாம் பிளாப் ஆகி வந்த நிலையில், தன்னை மட்டும் முழுசாக நம்பி அவர் இயக்கி நடித்த படம் தான் அரண்மனை. இந்த படம் மெகா ஹிட் அடித்தது.

அரண்மனை 4 படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள் இந்தப் படமும் முதல் வந்த படம் போலத்தான் இருக்கும் என்று எண்ணத்தில் தான் சென்றார்கள். 

ஆனால் இதன் முதல் காட்சியிலேயே படகு சென்று கொண்டிருக்கும்போது இளம் பெண்ணுக்குள் புகுந்த பாக் பேய் மீனை கடித்து திண்ணும் காட்சியில் தியேட்டர்களை அலற வைத்துவிட்டார்கள் ரசிகர்கள்.

அரண்மனை 4 பாகத்தில் காமெடி காட்சிகளை குறைத்த சுந்தர்.சி, ஹாரர் காட்சிகளை முதல் பாதியில் காட்டி மிரட்டி உள்ளார். அதுவே இந்த படத்துக்கு வெற்றியாக மாறிவிட்டது.


இந்த படத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையில் வெளியான பாடல்கள், இசையமைத்த பின்னணி இசை என அனைத்துமே மிரட்டல் ஆக காணப்படுகிறது. 

அதிலும் கூடுதலாக தமன்னாவையும் ராசிகன்னாவையும் கவர்ச்சி உடையில் காட்டிய அச்சச்சோ பாடல் படத்தின் இறுதியில் காட்டியதால், தியேட்டர்களில் ரசிகர்கள் இறுதிவரை இருப்பது  இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக காணப்படுகிறது.

இந்த நிலையில், அரண்மணை 4 படத்தின் முதல் நாள் வசூல் 4 கோடி ரூபா பெற்ற நிலையில், தற்போது அதன் 5வது நாள்  அதிகபட்சமாக 30 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement