• May 20 2024

கொளுத்துடா வெடிய...!! தக் லைஃப் படத்தில் புழுதி பறக்க என்ட்ரி கொடுத்த சிம்பு! ப்ரோமோ இதோ...

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமலஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்தினம் ஆகியோர் கூட்டணியில் இணைந்து உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப்.

இந்த படத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அபிராமி நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கின்றார்.

தக் லைஃப் படத்தில் நடிப்பதற்கு துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் கமிட்டான நிலையில், அவர்களுக்கு கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகினார்கள். அவர்களுக்கு பதிலாக யார் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து  காணப்பட்டது.

இதை தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு நடிக்க  கமிட்டானதாக தகவல் கசிந்தது. அதேபோல ஜெயம் ரவிக்கு பதிலாக அசோக் செல்வன் நடிப்பதாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில், தற்போது  தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்பு நடிப்பதை ப்ரோமோ மூலம் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.


இவ்வாறு தற்போது வெளியான ப்ரோமோவில் எல்லை பாதுகாப்பு படை வாகனத்தில் சிம்பு வருவதால் அவர் இந்த படத்தில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரியாக நடிக்கின்றாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இதன் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகின்றது. இப்படத்தை மெட்ராஸ் நிறுவனமும், கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும், உதய ஸ்டாலின் ரெட் ஜெயராம் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement