• May 19 2024

இந்திய திரைப்படங்களில் முதன் முறையாக விருதுக்கு தேர்வான ஹிட் படம்! எந்த விருதுக்கு தெரியுமா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, மெர்சல், தெறி போன்ற பிளாக் பாஸ்டர் படங்களை இயக்கியவர் தான் அட்லீ. தற்போது இவர் பாலிவுட்டில் கலக்கி வருகின்றார்.

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா நடித்த படம் தான் ஜவான். இந்தப் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மெகா ஹிட் அடித்தது. அதற்குப் பிறகு இயக்குனர் அட்லீயின் ரேஞ்சே வேற மாதிரி ஆனது.


இந்த நிலையில், பாலிவுட்டில் பட்டையை கிளப்பிய ஜவான் திரைப்படம் ஆஸ்கருக்கு நிகரான விருதுக்கு தேர்வாகியுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா எதிர்வரும் மே 11ம்  திகதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

குறித்த விழாவுக்கு முதன்முறையாக இந்திய திரைப்படமான ஜவான் திரைப்படம் தேர்வாகியுள்ளது. அதற்கு போட்டியாகஜான்விக் 4, மிஷன் இம்பாசிபிள் போன்ற படங்களும் நாமினேட் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement