• Jan 18 2025

சுந்தரி சீரியலின் offscreen clicks -ஐ பார்த்தீர்களா? கேப்ரில்லா எம்புட்டு அழகா இருக்கா.?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும் அழகுக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் பல திறமைகளை தன் வசம் கொண்டவர் தான் நடிகை கேப்ரில்லா செல்லஸ். இவர் ஆரம்ப காலத்தில் டிக் டாக், யூட்யூபில் வீடியோ வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதைத் தொடர்ந்து நயன்தாரா நடித்த ஐரா படத்தில் நடித்திருந்தார். மேலும் சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 போன்ற படங்களிலும் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

d_i_a

இதை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை தனதாக்கி கொண்டார். இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக சுந்தரி சீரியலின் இரண்டாம் பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.


இதற்கிடையில் சுந்தரி சீரியல் நடிகையான கேப்ரில்லா செல்லஸ் தனது கணவனை பிரிந்ததாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவின. ஆனாலும் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புகைப்படத்துடன் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், சுந்தரி சீரியலில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளன. இதை பார்த்த ரசிகர்கள் தமது அன்பை வெளிக்காட்டும் விதமாக கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement