• Sep 20 2024

நள்ளிரவில் நடுத்தெருவில் இருந்து வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி நந்தினி.. தீயாய் பரவும் வீடியோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் மைனா நந்தினி.இதன்பின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்தார்.

மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் தனது கணவர் யோகேஷுடன் கலந்துகொண்டார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலக்கி வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி, புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்.

இந்நிலையில், தற்போது நள்ளிரவில் நடுத்தெருவில் டப்ஸ்மாஷ் செய்துள்ள நகைச்சுவையான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதோடு லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement