• Mar 28 2023

"ஹாய் மாப்ள, நல்லா இருக்கியா?- கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் வீடியோ காலில் பேசிய நடிகர் TSK

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர் தான்  TSK. இந்த நிகழ்ச்சியின் 2வது மற்றும் 3வது சீசன்களில் அசார் உடன் சேர்ந்து சூப்பராக காமெடி செய்து இரண்டு சீசன்களிலும் வெற்றியாளர் ஆனார். இதனை அடுத்து கலக்கப் போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்குபற்றி வருகின்றார்.

இது தவிர படங்களிலும் நடித்து வருகின்றார். அண்மையில்  ஹிந்தியில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கன்னா, ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருந்த Farzi வெப் சீரிஸின் தமிழ் டப்பிங்கில் நடிகர் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்து அவரை போலவே பேசி பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார் TSK.


அப்படி இருக்கையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை குறிப்பிட்டு TSK பகிர்ந்துள்ள வீடியோ, இணையவாசிகள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.TSK பகிர்ந்துள்ள வீடியோவில், பின்பக்கம் ஹர்திக் பாண்டியா வீடியோ காலில் பேசுவது போன்று இருக்கும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. 

அதில் அவருடன் வீடியோ காலில் பேசுவதை போன்று உணர்வை தரும் வகையில், குட்டியாக தான் பேசும் வீடியோவை வலதுபுறம் மேலே வைத்துள்ள TSK, ஹர்திக் பாண்டியாவிடம், "ஹாய் மாப்ள, நல்லா இருக்கியா?. ஏன் மேட்ச்ல பார்க்க முடியல உன்னை. வீட்டுல எல்லாரையும் கேட்டதா சொல்லு. ஐபிஎல் -ல பாப்போம் சரியா?" என பேசவும் செய்கிறார்.


இரண்டு சம்மந்தம் இல்லாத வீடியோக்களை இணைத்து ஹர்திக் பாண்டியாவிடம் பேசுவது போன்ற வகையில், TSK உருவாக்கி உள்ள இந்த வீடியோ, தற்போது பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.



Advertisement

Advertisement

Advertisement