• Mar 29 2023

வணங்கான் படப்பிடிப்பில் இணைந்த அருண் விஜய் - சூர்யா கைவிட்டாலும் படம் ரிலீஸ் ஆகும்- கெத்துக்காட்டிய பிரபலம்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


நந்தா, பிதாமகன் என மாஸ் காட்டிய சூர்யா - பாலா காம்போ, மீண்டும் வணங்கான் படத்தில் இணைந்தது. கன்னியாகுமரி பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது.இருப்பினும் படப்பிடிப்பில் சூர்யா மற்றும் பாலாவுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சூர்யா படத்திலிருந்து விலகினார்.

 ஆனாலும் வணங்கான் படத்தை கண்டிப்பாக முடிக்க வேண்டும் என பாலா உறுதியாக இருந்தார். அதனால், அருண் விஜய்யிடம் சென்ற பாலா, தற்போது அவரை களத்தில் இறக்கிவிட்டார். இதன்மூலம் தான் நினைத்தபடி வணங்கான் படத்தை பாலா ரிலீஸ் செய்துவிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.


இதுதொடர்பாக ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் வணங்கான் ஷூட்டிங் ஸ்பாட் என கேப்ஷன் கொடுத்து இயக்குநர் பாலாவை டேக் செய்துள்ளார். 


மேலும், இதில் அருண் விஜய் கலந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement