பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களுள் ஒருவர் தான் சீரியல் நடிகையான அன்ஷிதா.. இவர் பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முதல் பல நெகட்டிவ் கமெண்ட்களை சந்தித்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அன்ஷிதா. ஆனாலும் இதில் நடித்த அர்ணவ் என்பவருக்கும் அன்ஷிதாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
ஆனால் அர்ணவ் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். இந்த விவாகரத்துக்கும் அன்ஷிதா தான் காரணம் என்று சொல்லப்பட்டது.
இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதாவும் அர்ணவும் ஜோடியாகவே பங்கு பற்றி இருந்தார்கள். அதில் அர்ணவ் மூன்றாவது வாரத்திலேயே எலிமினேட் ஆகி வெளியே சென்றிருந்தார். அதன் பின்பு அன்ஷிதா சிறப்பாக தனது ஆட்டத்தை விளையாடி வந்தார்.
எனினும் கடந்த வாரம் அன்ஷிதாவும் ஜெஃப்ரியும் எலிமினேட் ஆகியிருந்தார்கள். அன்ஷிதா வெளியே சென்ற போது விஜய் சேதுபதி நீங்க உள்ள வரும்போது இந்த நெகட்டிவ் எல்லாம் போய் அன்ஷிதா என்றால் யார் என்ற உண்மை தற்போது ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும் என்று அவருக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில், பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அன்ஷிதா. அதில் தனது அண்ணனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
Listen News!