விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அஸ்வின் கார்த்திக். ஆனாலும் இவர் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான குலதெய்வம், மனசு, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். மேலும் சமீபத்தில் முடிவுக்கு வந்த வானத்தைப்போல சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்திருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இவருடைய எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது.
இவர் காயத்ரி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு குடும்பத்தாருடைய சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றதோடு பல பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
இதை அடுத்து காயத்ரி ஐந்து மாதமாக கர்ப்பமாக இருக்கும் போது முதல் முறையாக வளையல் பூட்டு பூ முடிக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு சந்தோஷமான செய்தியை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார் கார்த்திக்.
இந்த நிலையில், தற்போது பிரக்னன்சி போட்டோ ஷூட் செய்து உள்ளார்கள் கார்த்திக் காயத்ரி ஜோடி.. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!