• Feb 22 2025

அடேய்.. VishPoo பக்கிகளா..! என்னை ஏன்டா இழுக்கிறீங்க? திடீரென வீடியோ வெளியிட்டு கொந்தளித்த RJ ப்ரொவோ?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் இறுதியாக வைக்கப்பட்ட பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறியவர் தான் பூர்ணிமா ரவி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இவர், வீடியோக்கள், போட்டோ சூட் என ஆரம்பித்து நாளடைவில், தனது காமெடி வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதை தொடர்ந்து அண்மையில் நயன்தாராவுடன் இணைத்து நடித்த அன்னப்பூரணி படம், மற்றும் இவர் நடிப்பில் வெளியான செவப்பி படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆனாலும் அது மலரும் முன்பே ஸ்பீட் பிரேக் போட்டார் விஷ்ணு. 

இதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மாறி மாறி பிக் பாஸ் வீட்டில் முட்டி மோதிக் கொண்டனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னரும், அவர்கள் இருவரையும் வைத்து அவர்களது ரசிகர்கள் கலாட்டா செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளரான RJ ப்ரொவோ, 'என்ன ஏன்டா நடுவுல இழுக்கிறீங்க..' என வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதாவது, பூர்ணிமா, விஷ்ணு பெயர்களை இணைத்து சமூக வலைத்தளங்களில் VishPoo என்ற சொல் ட்ரெண்டாகி  வருகிறது. 

அதற்கு RJ ப்ரொவோவையும் டேக் பண்ணிய போதே, தன்னை எதற்காக டேக் பண்ணுறீங்க? என கேட்டு கதறியுள்ளார். இதோ அந்த வீடியோ....



Advertisement

Advertisement