• May 19 2024

ஹிப்ஹாப் ஆதி வீரனாக சாதித்தாரா..? இல்லையா..? 'வீரன்' படத்தின் திரை விமர்சனம் இதோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

அன்பறிவு படத்தினை அடுத்து இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள படம் 'வீரன்'. இந்த படத்தை ஏஆர்கே சரவணன் வித்தியாசமான கதையம்சம் நிறைந்ததாக இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ஆதிரா,காளி வெங்கட், முனீஸ்காந்த், வினய்,சசி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


கதைக்களம்

இப்படத்தினுடைய கதையம்சத்தை நோக்குவோம். அந்தவகையில் வீரனூரில் வாழ்ந்து வரும் கதாநாயகன் குமரன் {ஹிப் ஹாப் ஆதி} தனது சிறு வயதில் மின்னலால் திடீரென தாக்கப்பட்டு சுய நினைவை இழந்து விடுகின்றார். பின்னர் இவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.

இதனையடுத்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சையில் இருக்கும் ஆதி எப்போது வேண்டுமானாலும் சுய நினைவுக்கு வரலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார். இந்நிலையில் வீரனூரில் இருந்து தனது தம்பியை சிங்கப்பூருக்கு ஆதியின் அக்கா அழைத்து கொண்டு சென்று விடுகிறார். 

பின்பு சிங்கப்பூருக்கு செல்லும் ஆதிக்கு சில நாட்கள் கழித்து சுய நினைவு திரும்புகிறது. இதனைத் தொடர்ந்து நாட்கள் செல்ல செல்ல தனக்குள் மின்னல் சக்தி இருப்பதை ஆதி உணர்ந்து கொள்கின்றார். அதுமட்டுமல்லாது ஆதி தன்னால் வேறொருவரின் மூளையை கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து கொள்கிறார். 

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் வீரனூருக்கு வரும் ஆதி தனது சிறு வயது நண்பர்களை சந்தித்து அங்கு ஆடி பாடி மகிழ்ச்சியாக இருக்கிறார்.

இந்த சமயத்தில் தான் திடீர் என்ட்ரி கொடுக்கிறார் வில்லனாக வரும் நடிகர் வினய். இவர் தனது ரூ. 2000 கோடி மதிப்புள்ள மிகவும் ஆபத்தான திட்டத்தை வீரனூரில் செயல்படுத்த தீவிர முயற்சி செய்து வருகிறார். ஆனால் இந்த திட்டத்தினால் ஏராளமான மக்கள் உயிர் பலியாகும் என ஆதிக்கு பின்பு தெரியவருகிறது. 

இதனையடுத்து ஆதி என்ன செய்தார்? வில்லன் வினய்யை சூப்பர் ஹீரோவாக மாறி எப்படி எதிர்கொண்டார்? என்பதே இப்படத்தின் உடைய மீதிக்கதையாக அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு 

இப்படத்தில் ஹீரோவாக வரும் ஹிப் ஹாப் ஆதி வீரன் படத்தின் மூலம் மீண்டும் இப்படத்தின் மூலமாக மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக குமரனாக வரும் போதும் சரி வீரனாக வரும் போதும் சரி நடிப்பில் அசைத்தி இருக்கின்றார். அத்தோடு சண்டை காட்சிகளிலும் சிறப்பாக மிரட்டி இருக்கின்றார்.

அதேபோன்று இப்படத்தில் கதாநாயகியாக வரும் நடிகை ஆதிரா மற்றும் ஆதியின் நண்பனாக வரும் சசி இருவரின் நடிப்பும் அமோகமாக இருக்கின்றது. அதேபோல் முனீஸ்காந்த் - காளி வெங்கட் காம்போ சிறப்பாக உள்ளது. அந்தவகையில் இவர்கள் இருவரும் வரும் அனைத்து காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றது. 

மேலும் இதில் வில்லனாக வரும் வினய்க்கு மிகவும் குறுகிய காட்சிகள் மட்டும் தான் உண்டு. ஆகவே அவருக்கு படத்தில் பெரிதும் வேலை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இருப்பினும் இரண்டாவது வில்லனாக வந்த நடிகர் பத்ரி அதகளப்படுத்தியுள்ளார். 

அதேபோல் நடிகர் செல்லா, போஸ் வெங்கட், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. 

மேலும் ஊரில் உள்ள யாரும் வீரன் சாமியை நம்பாத போது, வீரனை மட்டும் நம்பும் முதியவரின் நடிப்பு அனைவரையும் மிஞ்சிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படத்தின் மூலமாக நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக எடுத்து காட்டியுள்ளார் இயக்குநர். 


பலம் 

பின்னணி இசை செம சிறப்பாக இருக்கின்றது. 

ஆதியின் நடிப்பு சிறப்பாக உள்ளது. மேலும் முனீஸ்காந்த் - காளி வெங்கட் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பல சேர்ந்துள்ளன.

கதைக்களம், திரைக்கதை என்பனவும் வலு சேர்ந்துள்ளன.

பலவீனம் 

இப்படத்தினுடைய பலவீனம் என்று பார்த்தால் வில்லன் என எதிர்பார்க்கப்பட்ட வினய்க்கு சுத்தமாக படத்தில் ஸ்கோப் இல்லை என்று தான் கூறலாம்.

தொகுப்பு 

ஆகவே மொத்தத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ கான்செப்ட் கொண்ட திரைப்படங்கள் எதுவும் வெற்றி அடையவில்லை. இப்படம் அமோக வெற்றியைக் கொடுக்கும் என நம்பலாம். 

Advertisement

Advertisement