• Jul 27 2024

ரீரிலிஸ் ஆகும் ஷங்கர் படம்.. ஆனால் தமிழ்நாட்டில் இல்லை.. தெலுங்கில் மட்டும் தான்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களாக ஏற்கனவே ஹிட்டான திரைப்படங்கள் மீண்டும் ரீரிலிஸ் ஆகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் ரீரிலீஸ் ஆன ’கில்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 50 நாட்கள் வரை இந்த படம் திரையரங்குகளில் ஓடியதோடு 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக வேறு சில படங்களும் ரீரிலிஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக  இன்று முதல் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ’அந்நியன்’ திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஆனால் அதே நேரத்தில் இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் தான் ரீரிலிஸ் ஆகியிருப்பதால் தமிழ் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ், விவேக், நெடுமுடி வேணு, உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது என்பதும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்த படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி கிட்டத்தட்ட 60 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு போலவே தமிழிலும் இந்த படம் ரீரிலிஸ் ஆக வேண்டும் என்று தமிழ் ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இது குறித்து ஷங்கர் மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் என்ன முடிவெடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement