• Jan 19 2025

12 வருடத்தில் மின்னல் வேகத்தில் வளர்ச்சி கண்ட சந்தோஷ் நாராயணன்! மொத்த சொத்து விபரம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான 'அட்டகத்தி' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் சந்தோஷ் நாராயணன். அதை அடுத்து பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்களில் அடுத்தடுத்து இசையமைத்திருந்தார்.

நடிகர் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தில் இவரது இசை மிகப் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதன் பிறகு மெட்ராஸ், 36 வயதிலேயே, கபாலி, இறுதிச்சுற்று, காலா, மனிதன், வடசென்னை, கர்ணன் உட்பட பல படங்களில் இசையமைத்து மிகவும் பிரபலமானார்.

தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உட்பட்ட படங்களிலும் தற்போது இசையமைத்து வருகின்றார். இதில் உலகநாயகன் கமலஹாசன், பிரபாஸ் நடிக்கும் கல்கி 28 98 AD திரைப்படம் அடங்கும்.

இந்த நிலையில், தற்போது பிரபல இசையமைப்பாளராக காணப்படும் சந்தோஷ் நாராயணனின் சொத்து மதிப்பு பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளது.


அதன்படி ஆரம்பத்தில் ஆயிரமே சம்பளமாக பெற்ற சந்தோஷ் நாராயணன் 5 வருடத்தில் 25 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக திகழ்ந்தார். தற்போது ஒரு படத்திற்கு ஒரு கோடியில் இருந்து 2 கோடி வரை பெற்று வருகின்றாராம்.

அதையும் தாண்டி சில மியூசிக் கான்செப்ட் நடத்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர், யூடுயூபில் ஹிட்டடித்த என் சாமி போன்ற ஆல்பம் பாட்டுகளுக்கும் இசையமைத்து வருகின்றார்.

இவ்வாறு 12 வருடங்களாக இசையமைப்பாளராக காணப்படும் சந்தோஷ் நாராயணனுக்கு சென்னையில் பிரம்மாண்ட வீடு, சொகுசு கார், பைக், மியூசிக் ஸ்டூடியோ போன்றவற்றோடு 21 கோடி முதல் 25 கோடி வரை சொத்துக்கள் காணப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement