• Apr 26 2024

நாக சைதன்யாவின் 'கஸ்டடி' படம் எப்படி இருக்கின்றது..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கஸ்டடி'. இதில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், வில்லனாக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். அத்தோடு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்து உள்ளனர். 


இந்நிலையில் இப்படமானது இன்றைய தினம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். 


அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் கூறுகையில் "நாக சைதன்யா தமிழ் ஸ்டைலில் வித்தியாசமாக முயற்சி செய்துள்ளார். படத்தின் திரைக்கதை மெதுவாக நகர்கிறது. ஆங்காங்கே சில நல்ல காட்சிகள் உள்ளன. அரவிந்த் சாமியில் ரோல் பெரிய அளவு சோபிக்கவில்லை. காமெடி ரொம்ப மோசமாக உள்ளது, இசையும் பழசாக உள்ளது. கீர்த்தி ஷெட்டி லக் இல்லாத ஹீரோயினாக தொடர்கிறார். பொறுமையை சோதிக்கும் படமாக உள்ளது. ஓடிடியில் வேண்டுமானால் இப்படத்தை பார்க்கலாம்" என பதிவிட்டுள்ளார்.


மற்றோர் நெட்டிசன் "கஸ்டடி டீசண்ட் ஆன படமாக உள்ளது. பாடல்கள் மற்றும் முதல் 30 நிமிடங்கள் தான் படத்தின் மைனஸ். காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. திரைக்கதை விறுவிறுப்பாக உள்ளது. நாக சைதன்யா சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். யுவனின் பின்னணி இசை சில இடங்களில் நன்றாக உள்ளது. ஆனால் பாடல்கள் ரொம்ப மோசம்" என பதிவிட்டுள்ளார்.


இன்னொரு நெட்டிசன் தனது பதிவில் "கஸ்டடி சிறப்பாக எழுதப்பட்டுள்ள விறுவிறுப்பான திரில்லர். நாக சைதன்யாவும், அரவிந்த் சாமியும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர். படம் ஆரம்பத்தில் டல் அடிக்கிறது. ஆனால் 30 நிமிடத்திற்கு பின் பிக்-அப் ஆகிறது" எனக் கூறி இருக்கின்றார்.


மேலும் ஒருவர் கூறுகையில் "கஸ்டடி தமிழ் நடிகர்களை வைத்து தமிழ் பிளேவரில் எடுக்கப்பட்டுள்ள தெலுங்கு படம். படத்தில் மிகவும் மோசமாக இருப்பது இசை தான். நிறைய காட்சிகள் பொறுமையை சோதிக்கும் வாகையில் உள்ளன. பேசாம நாக சைதன்யா தெலுங்கு இயக்குநர்களை தேர்வு செய்து நடிக்கலாம்" என பதிவிட்டுள்ளார்.


இன்னொருவர் தனது பதிவில் "மொத்தத்தில் கஸ்டடி மிகவும் சராசரியான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சில காட்சிகளுடன் கூடிய சுவாரசியமான கதைக்களம் சில இடங்களில் வேலை செய்தாலும். பெரும்பாலான இடங்களில் டல் அடிக்கிறது. பல இடங்களில் திரும்பத் திரும்ப வரும் ஆக்‌ஷன் காட்சிகளால் படம் சோர்வை ஏற்படுத்துகிறது. பின்னணி இசை ஓகே தான் ஆனால் பாடல்கள் மோசம்" எனக் கூறியுள்ளார்.


இவ்வாறாக கஸ்டடி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement