• Apr 27 2024

ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' படம் எப்படி இருக்கிறது..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் 'வீரன்'. ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். 


மேலும் இவர்களுடன் இணைந்து முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்நிலையில் வீரன் திரைப்படம் ஹிப் ஹாப் ஆதிக்கு கை கொடுத்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம். அந்தவகையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் முன்வைத்துள்ள விமர்சனங்களின் தொகுப்பு இதோ..!

நெட்டிசன் ஒருவர் கூறுகையில் "இடைவேளைக்கு பின்னர் வருகின்ற மாற்றம் நன்றாக இருப்பதாகவும், கிளைமாக்ஸ் காட்சி சூப்பராக இருப்பதாகவும்" குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் மற்றோரு நெட்டிசன் "பெஸ்ட் திரைப்படம் எனவும், படத்தில் ஹீரோவை விட இசையில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும்" கூறியுள்ளார்.


இன்னொருவர் கூறுகையில் "படம் எதிர்பார்த்ததை விட சூப்பராக இருக்கு மக்களே' எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் ஒருவர் கூறுகையில் "இது பார்க்க வேண்டிய படம். மியூசிக் வேற லெவல். இன்ட்ரெவல் சென்ஸ் சூப்பர். பல காட்சிகளில் காமெடி நன்றாக வேலை செய்தது. போலீஸ் ஸ்டேஷன் சண்டைக்காட்சிகள் ரொம்ப நன்றாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்று பாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறாக இந்தப் படமானது ரசிகர்களிடமிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை அதிகம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement